Saturday, September 18, 2010

பாரதியாரின் பள்ளிக்கூட அனுபவம்

நண்பர் தங்கமணி எனக்கு வ.ரா எழுதிய "மகாகவி பாரதியார்" புத்தகத்தை பரிசளித்திருந்தார். என்னைப்போல் அவ்வளவாக தமிழறியாத பாமரனுக்கும் படிப்பதற்கு எளிதாகவும் சுவையாகவும் இருந்தது. பாரதியாரின் பள்ளிக்கூட அனுபவம் குறித்து அவரே எழுதியது

"
காலை மாலை நூலை ஓது என்கிறார்கள். அது தப்பு. நான் படித்த காலத்தில், நான் நூலையே ஓதினதில்லை. பள்ளிக்கூடத்துக்கு காலையில் போனால் மாலையில் போக மாட்டேன். மாலையில் போகலாம் என்று எண்ணிக் காலையில் போக மாட்டேன். பிறகு ஒரு எண்ணம் தோன்றும். மாலையிலும் போக மாட்டேன். காலை மாலை உருண்டோடிப் போகும். புஸ்தகம் ஹஸ்தபூஷணம் என்பதும் தவறு. ஹஸ்தத்துக்கு பூஷணம் (கைக்கு அலங்காரம்) நல்ல சில்க் சட்டை, ஜோரான பச்சைக்கல் மோதிரம். நான் புஸ்தக மூட்டையை தூக்கிக் கொண்டு பள்ளிகூடத்துக்கு போனதே இல்லை. சட்டை ஜேபியில் சில கடிதங்கள், ஒரு பென்சில்-இவைகள் தான் இருக்கும். வாத்தியார் பாடம் சொல்லிக்கொண்டிருப்பார். அவரைப் பற்றி ஹாஸ்யக் குறிப்புகள், வசனத்திலும் பாட்டிலும் எழுதி அடுத்த பையனிடம் நீட்டுவேன். இருவரும் சிரிப்போம். பிறகு பெஞ்சு பூராவும் பரவிவிடும். ஒரே சிரிப்பு. என்ன சத்தம் என்று வாத்தியார் கேட்குமுன்னரே, மெதுவாக வகுப்பிலிருந்து நழுவிவிடுவேன். வீட்டுக்கு வந்து,மாடியிலேறி, கங்காப் பிரவாகத்தைப் பார்த்துக் கழிப்பேன். இது தான் நான் படித்த கதை.
"
இதற்குப்பிறகு நான் என்ன எழுதுவது என்றே தோன்றவில்லை.