Saturday, December 04, 2010

முரசு

"நிகரென்று கொட்டு முரசே - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்

.......

அன்பென்று கொட்டு முரசே!-அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவுமே போகும்-வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்


அன்பென்று கொட்டு முரசே! மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெறுகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்
-----------------------------------------------


அன்பென்று கொட்டு முரசே!-அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்

------------------------------------------------------
ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!-இந்த
நானில மாந்தருக் கெல்லாம்

---------------------------------------------------------
"
மகாகவி பாரதியார்

அப்பப்போ கண்ணுல தண்ணி வர வெச்சிருவாறு நம்ம ஆளு மகாகவி. எப்போவாவது இப்படி வாழ முடியுமான்னு யோசிப்பேன்.

No comments: